பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இதுதான் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா


களாகும்.


பயிற்சிகள் தான் உடலைப் பதமாக்கி, இதமாக்கி வளர்க்கிறது என்றவுடன், பலர் திகைத்துப் போவதுண்டு. உடலை வருத்தி செய்யக் கூடியவை தான் உடற்பயிற்சிகள் என்று எல்லோருமே எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


உடற்பயிற்சி என்றதும், ஒரு மலையைப் புரட்டி மறுபக்கம் வைக்கும் செயல் என்று எண்ண வேண்டாம். ஒட்டம் என்றால் 26 மைல் தூரம் ஒடுகின்ற மாரதான் என்றும் மிரள வேண்டாம்.


அதாவது நடப்பது. கைவீசி நடப்பது. மூச்சு இறைப்பது போல வேகமாக நடப்பது. குறைந்தது 30 நிமிடங்கள் நடந்து செல்வது.


வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் நடைப் பயிற்சிகள், நல்ல பயிற்சிகளாக அமைந்துவிடும்.


உடற்பயிற்சிகளைப் புரிந்து கொண்டு, சரியாக, நெறி யாக செய்துவந்தபின், இளமையூற்றைக் கொப்பளிக்கச் செய்து விடலாம். அப்படியென்றால், பயிற்சி முறைகள் என்னென்ன, எப்படி :எப்படி என்று எழும் வினாக்களுக்கு இதோ பதில்கள்.


1) வயதானவர்கள் உடற்பயிற்சிகளைத் தொடங்கு வதற்கு முன்னதாக, தங்களது குடும்ப டாக்டர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்: அவர்கள் அனுமதியுடனும், ஆலோசனை வழியும் பயிற்சிகளைச் செய்வது பெரிதும் உதவியாக இருக்கும். பத்திரவங்கள் குறையும்.