பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆாட்கள் செய்துவந்தால் சிறப்பான எதிர்பார்க்கும் பலன்


களைப் பெறமுடியும்.


(2) வலிமை தரும் பயிற்சிகள் :


உடல் தசைகளுக்கு வலிமையளிக்கக் கூடிய பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்துவந்தால் போதுமானது. இவ்வாறு தொடர்ந்து பல மாதங்கள் செய்து வந்தாக வேண்டும்.


கைகளில் சிறிது எடைகளை வைத்துக்கொள்ளலாசி சில சமயங்களில் பயிற்சி செய்ய உதவும் எடை சாதனங்களை யும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் உடல் நிலையைப் பொருத்து, நீங்கள் எடைப் Luosi,Ga goat (Weight Training) மேற்கொள்ளலாம், விடா முயற்சியுடனும், விருப்பத் துடனும் நிதானத்துடனும் நிலையான ஆர்வத்துடனும் இதுபோன்ற பயிற்சிகள் செய்துவந்தால், வலிமை மிகு தசை களையும், வனப்பான உடலமைப்பையும் பெறலாம்.


(3) நெகிழ்ச்சி தரும் பயிற்சிகள்.


உடலில் மூட்டுகள் இருக்கின்றன. அவற்றை இணைத்துக் கட்டுகின்ற தசை நார்கள் நரம்புகளும் இருக்கின்றன. இவைகளின் இதமான இயக்கங்கள் இல்லாதபோதுதான், உடலில் விறைப்புத் தன்மையும், வறட்சித்தன்மையும் மிகுதி யாகிப் போகின்றன.


அந்த இணைப்புகளில் நெகிழ்ச்சித் தன்மையை (Fiexibility) உண்டாக்கும் :முயற்சிகளைத்தான் பயிற்சிகள் செய்கின்றன. முன்புறமாக, பக்கவாட்டில், பின்புறமாக முடிந்தவரை குனிந்து நிமிருதல், வளைந்து பழகுதல் போன்ற பயிற்சி முறைகளில் ஈடுபடவேண்டும்.