பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 HH f H 245, மறைந்து கிடக்கும் மனத சக்தி


இப்படிப்பட்ட பயிற்சிகளை தினந்தோறும் தவறாமல் ,ைாது வந்தால், தகுந்தபயன்களை நிச்சயமாகப் பெற முடியும்.


பாதுகாப்பான குறிப்புகள்:


இளமையைத் திரும்பவும் பெற்றேயாகவேண்டும், இனிய வாழ்வு வேண்டும் என்ற வேட்கையுடன், நீங்கள் பயிற்சியை நம்பி ஈடுபடத் தொடங்கிவிட்டால், அதற்குமுன், கீழே காணும் பாதுகாப்பு தரும் குறிப்புகளைப் படியுங்கள். கட்டாயமாகப் பின்பற்றுங்கள்.


விடாப்பிடியாக, இந்தக் குறிப்புகளை நீங்கள் மீறினால், குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாகிவிடும். உடும்புப் பிடிக்கப்போய், உடும்பு கையை விட்டால் போது மென்ற நிலையாகிவிடும். ஆகவே கூர்ந்து படியுங்கள். கருத்தாகப் பின்பற்றி பயன் பெறுங்கள்.


1. முதலில் உங்கள் குடும்ப டாக்டரைப் பாருங்கள், உங்கள் உடலை நன்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள். எப்படிப்பட்ட பயிற்சிகள் செய்யலாம் என்பதில் ஆலோ சனை பெற்று தொடங்குங்கள்.


2. உங்கள் உடல்நிலை, உடலின் சக்தி, உடலைப் பற்றிய விவரம் மற்றவர்களைவிட, உங்களுக்குத்தான் தெரியும். உடலுக்குக் களைப்பு அதிகம் நேராமல், தூக்கப் பிரச்னை எதுவும் வராமல், உடலுக்குள்ளே வலியும் வேதனையும் நிறைந்து விடாமல், அளவோடு செய்துவர வேண்டும். அதிக ஆர்வம் அதிகத் துன்பத்திற்காளாக்கும்.


3. பயிற்சியைத் தொடங்கியவுடனே, இளமை வர வில்லையே, வலிமை பெறவில்லையே, கம்பீர நிலை யில்லையே என்று குழம்பிக்கொள்ளவேண்டாம். வாரக்