பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. தொந்தி வந்து விடுகிறதே !


“ - கண்டாடி-துங்க


உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் வயிறு பெரிதாக வந்துவிடுகிறதே!


உடற்பயிற்சி செய்வதன் முழு நோக்கமானது, உடலை நேராக நிறுத்தி. சீராக இயங்கச் செய்து, செழுமையாக வலிமையாக வாழச் செய்வதுதான்,


உடற்பயிற்சி செய்யும் பொழுது சுவாசம் அதிகரிக்கிறது, துரையீரலுக்கு அதிகமான உயிர்க்காற்று போய் சேர்கிறது. உயிர்காற்றைப் பெறுகிற இரத்தம், ஒட்டத்தில் வேகம் பெறுகிறது, உறுப்புகளுக்கு உரிய நேரத்திற்கு முன்பே


போய் சேர்கிறது.


உயிர்க் காற்றைக் கொடுக்கின்ற இரத்தம், திரும்பும் பொழுது, உறுப்புக்களில் சேரும் கழிவுப் பொருட்களை, வேண்டாத கரியமிலவாயுவை, லேக்டிக் ஆசிட் போன்ற வற்றை வெளியே கொண்டு வந்து விடுகிறது.