பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 6 TTTS TTTS TTATTS AAAAA AAAA AAAA S A 0


அதனால் தான் உடற்பயிற்சி செய்கின்றவர்களும், விளையாட்டில் பங்கு பெறுபவர்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள். பரபரப்பாக இயங்குகின்றார்கள்.


எந்த உறுப்பு அதிகமாக இயங்குகிறதோ, அந்த உறுப்பு தான் அதிக வளர்ச்சியையும். அதிக வலிமையையும், செயல் படும் சீர்மையையும் பெறுகிறது என்பார்கள் வல்லுநர்கள்.


அதற்கான காரணம் என்னவென்றால், அதிகமாக இயங்கும் உறுப்புசளுக்கு, அதிகமான இரத்த ஒட்டம் போய் சேருவது தான். அதிக இரத்த ஓட்டம் பெறுகின்ற உறுப்புக் களே திறனில் செழிக்கின்றன. உரனில் உயிர்த்தெழுகின்றன.


விளையாடுவோருக்கும் உடற்பயிற்சி செய்வோருக்கும் அதிகமான பிராண வாயு கிடைக்கிறது என்று முதலில் கூறியது. உங்களுக்கு நினைவுக்கு வரும்.


பயிற்சியிலும் விளையாட்டிலும் ஈடுபடும் பொழுது, உடலில் உள்ள செல்கள் உடைபட்டுப் போகின்றன.


மீண்டும் புதிய ஆக்கத்தோடு வளர்ச்சி பெறுகின்றன.


அதுபோலவே, உடலில் உள்ள கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதிகமான சக்தி வெளிப்பட்டுப் போவதால், அதனை சரிகட்டி சமப்படுத்த, அதிகமாக உணவினை உட்கொள்ளும் நிலைமை, அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.


உதாரணத்திற்கு ஒன்றை இங்கே கூறுகிறேன். சாதாரணமான உடல் இயக்கம் மற்றும் உழைப்பும் அதிக மற்ற ஒருவர். காலை சிற்றுண்டியாக, நான்கு இட்டிலி சாப்பிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.


உழைப்பாளி ஒருவர் 6 இட்லி சாப்பிடுகின்றாt என்ற உடற்பயிற்சி செய்பவர் 8 இட்லி சாப்பிடுகிறார்