பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது வயிறு காலியாக மாறுகிறது. ஜீரண அமிலங் , செழிப்பாக வேலை செய்ய காத்திருக்கின்றன. எரிகின்ற அடுப்பு போல, எதிர்பார்த்துக் கொண்டு உணவுக்காக வயிறு காத்திருக்கின்றது.


சாப்பிடும் உணவுப் பொருட்களையெல்லாம் எந்தவித சிரமமுமின்றி ஜீரணித்துத் தள்ளி விடுகிறது. எதைச் சாப் அட்டாலும் எரித்துச் சக்தியாக்கும் ஆற்றலை வயிறு வளர்த் துக் கொண்டிருக்கிறது.


எப்பொழுது? உடற்பயிற்சி செய்யும் நேரத்தில், விளையாடும் காலங்களில், அதனால் தான். வயிறு முட்டி வராமல், தொந்தி விழாமல், பலகை போல அழகாகக் காட்சியளிக்கிறது.


உடற்பயிற்சியை செய்யாமல் ஒருவர் ஏதோ காரணத் தால், விட்டு விடுகிறார். விளையாடப் போகின்ற வாய்ப்பு இல்லாமல் விளையாடாமல் விட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.


அவர் விளையாட்டைத்தான் விட்டு விட்டாரே ஒழிய, வயிற்றுக்குள்ளே தள்ளுகின்ற உணவின் அளவைக் குறைத்துக் கொண்டாரா என்றால் அது தான் இல்லை.


உடலுக்கு உழைப்பில்லை. பயிற்சியில்லை. ஆனால் உணவின் அளவோ குறையவில்லை. சில சமயங்களில் அளவுக்கும் மேலே.


வயிறு தன் வேலையைச் செய்ய முயல்கிறது. அதற்கு முன்பிருந்த வேகம் இப்பொழுது இல்லை. எந்தப் போருளையும் எரிக்கும் ஆற்றல் முன் போல் இல்லை.


சாப்பிட்ட 3 மணி நேரத்திற்குள்ளாக, இரைப்பையி லிருந்து - 653I6) 6A/ ஜீரணித்து வெளியேற்றும் வல்லமை,