பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வயிற்று உறுப்புகளுக்குக் குறைந்து போ கவே, கொழுப்புப் பொருட்கள் அங்கேயே அதிக நேரம் தங்க ஆரம்பிக்கின்றன.


வயிற்றுப் பகுதிகளைச் சுற்றிக் கொழுப்புகள் வளையம் கட்டிக் கொள்வதால், தான், வயிறு கொஞ்சங் கொஞ்ச மாகப் பெருத்துக் கொண்டே வளர்கிறது. அதுவே இறுதியில் அடையாளம் காட்டும் தொந்தியாக மலர்ந்து போகிறது.


வயிற்றுக்கு வேலை தந்து விடத்தான் தெரிந்தது. பயிற்சியை விட்டு விட்டவர்களின் பயிற்சிக்கும் உணவு உண்ணலுக்கும் பொருத்தம் இருக்கிறது. அதிகப் பயிற்சிஅதிக உணவு, குறைந்த பயிற்சி குறைந்த உணவு. இது தானே முறை!


ஆனால், அதிக உணவு-குறைந்த இயக்கம் என்றால், வயிறு மட்டுமா வளர்கிறது?


பலப்பல பிரச்சினைகள் பெருக்கெடுத்துப் புறப்பட அல்லவா ஆரம்பிக்கின்றன !


வயிற்றில் உணவுகள் தேக்கம். மலச்சிக்கல் கொடுமை. அதிலிருந்து முலக் கோளாறு. அpாணப் பிரச்சினை. அடுத்தடுத்துப் பெருமூச்சு. இரத்த அழுத்தம்.


இப்படியாக, வாயைக் கட்ட முடியாத முன்னாள் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தங்களின் குறைப்பாட்டை மறைக்க, தாங்கள் செய்த பயிற்சிகளின் மேல் பழியைப் போட்டு விடுகின்றார்கள்.


விளையாட்டை விட்டதால் தான் வயிறு வளர்ந்தறு என்று சொல்லாமல், விளையாட்டு வீரர்களுக்கும், உடற் பயிற்சியாளர்களுக்கும் வயிறு பெருத்து விடுகிறது, என்து