பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாம் உண்ணுகின்ற உணவில், கார்போஹைடிரேட் டுகள், புரோட்டின் கொழுப்பு போன்ற பலவகை சத்துக் சன் பரிமாறப்பட்டிருப்பதை நீங்களே அறிவீர்கள். -


ஒவ்வொரு கட்டத்திலும் உண்ட உணவு ஜீரணமாக, ஆங்காங்கே, சுரப்பிகள் தரும் சுவை நீர், ஜீரண நீர், இரைப்பை நீர், எனப்பல்வேறு ஜீரண நீர்கள் உற்பத்தி யாகின்றன .


வாய்க்குள் உணவு வந்து விழுந்தவுடனேயே, வாய் உட் புறத்தில் அமைந்துள்ள 3 ஜோ டி உமிழ் நீர்க் குழாய்கள். உமிழ் நீரை சுரக்க ஆாம்பித்துவிடுகின்றன. இந்த 3 ஜோடிக் குழாய்களும் 3 பின்ட் (Pint) அளவு உமிழ்நீரைச் சுரக் கின்றன. இது கார்போ ஹைடிரேட்டைக் கரைக்கும் ஆற்ற லைப் பெற்றிருக்கிறது.


கரைந்த உணவு இரைப்பைக்கு வந்து சேருகிறது. இரைப்பைக்குள்ளே இரைப்பை நீர் (Gastric Fluid) எனும் நீர் உற்பத்தியாகிறது. அமிலத்தன்மை நிறைந்த இந்த நீர், புரோட்டின் சக்தியை பெப்டோனாக மாற்றுகிறது. கொழுப்பையும் பிரிக்கின்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறது.


இதில் ஒரு சிறப்புக் குறிப்பு என்ன வென்றால், இரைப் பைக்கு வந்த உணவு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத் திற்குள்ளாக, இரைப்பையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.


இரைப்பைக்குள்ளே தசைகளின் வலிமையான இயக் கமே, உனவை ஆட்டி அரைக்கும் ஆற்றலாக அமைந்திருக் கிறது. -


குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே வெளியேற்றப்படுகின்ற உணவுக் குழம்பு, சிறுகுடலை நோக்கிச் செல்கின்றது. ஏறத்.