பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடல் நலமாகவும் பலமாகவும் இருக்கிற போது. உடலில் உள்ள சுரப்பிகள் ஜீரண மண்டலம் எல்லாம் இயற்கையான வலிமையுடன் தொழில் புரிகின்றன. உடல் பலஹீனம் அடையும் போது, வயிற்றுத் தொழிலும் வளமிழந்து போகிறதே! - =


இரைப்பை கணப்பையாகும்போது; உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கும் போது, கொழுப்புப் பகுதிகள் குடலைச் சுற்றி” ஆக்ரமிப்பு செய்கிறபோது, வயிறு தனது அளவில் விரிந்து கொண்டேதான் போக வேண்டியிருக்கிறது.


உடல் உழைப்பின்றி உட்கார்ந்து வேலை செய்பவர்கள். நடமாட்டம் இருந்தாலும், நினைத்த போதெல்லாம் சாப் பிட்டுக் கொண்டிருப்பவர்கள் ; முறையாக பயிற்சி செய்யாத வர்கள்: வயிற்றில் கேஸ் டிர பிள்’ என்ற காற்று நோய் உள்ளவர்கள் எல்லாம், தொந்திக்கு ஆளாகிப் போகின் றார்கள்.


(விரிவான விளக்கத்திற்கு, தொந்தியைக் குறைக்க சுலப மான வழிகள்’ என்கிறஎன் புத்தகத்தைப் படிக்கவும்)


வந்ததை என்ன செய்வது:


தொந்தி வருகிற போதே, அதன் தன்மை நமக்குப் புரிந்து விடும், வயிற்றில் ஏதோ புதிய சுமை இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். போடுகிற பேன்ட் அவதிக் குள்ளாவதும் தெரியும். o -


தொந்தியை இருவகையாக நாம் பிரிக்கலாம்.


1. Less GASTE (Cotton Belley)


2. இரும்புத் தொந்தி (Iron Belley)