பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடற் பயிற்சி செய்தால் தான், தொந்தி போகும். அப்படி உடற்பயிற்சி என்ன செய்கிறது? செய்து விடுகிறது!


வயிற்றின் பகுதியிலே முற்றுகையிட்டுக் கொண்டு, வளர்ந்து கொண்டே வருகிற கொழுப்புப் பகுதியை, உருக்கி அழிக்க வேண்டும். அந்த உருக்கும் வேலையைத் தான் உடற் பயிற்சி செய்கிறது.


தினம் தினம் தின்று, தொந்தியை வளர்த்த பிறகு, வாரத்திற்கு ஒரு நாள், மாதத்திற்கு ஒரு நாள் பயிற்சி செய்தால் போதும் என்று சொல்பவர்களுக்கு தொந்தி போகவே போகாது.


தினம் தினம் தேகப் பயிற்சி செய்யவேண்டும். அது உண்ணும் உணவுபோலவே, தினமும் தேவைப்படும் சக்தி


யாகும்.


எளிமையான பயிற்சிகளே போதும்! வலிமையான பயிற்சிகள் ஆரம்பக் கட்டத்தில் தேவைப்படாது. பின்னாட் களில் இப்பயிற்சிகள் பெரிதும் உதவும் பேறுள்ளவையாகும்.


எளிய பயிற்சிகள்


குறிப்பு, ஒரு பயிற்சியைத் தொடங்கும்போது நன்றாக மூச்சு இழுத்துக் கொண்டு பயிற்சியை செய்து, முடித்த பிறகே, அதாவது முடிவு நிலைக்கு வந்தவுடனே தான் மூச்சை நிறுத்த வேண்டும்.


1. கால்களை சேர்த்து வைத்து, கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, கைகளை கால்களுக்குக் கொண்டு வந்து, தொட்டு பிறகு இமலே உயர்த்தி, பிறகே மூச்சு விடவும். (10 முறை) முழங்கால்களை முடிந்த வரை வளைக்காமல் செய்யவும்.