பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பாராட்டவோ கைகுலுக்கவோ வரவில்லை. அவசர அவசர மாக பந்தய அரங்கைவிட்டு வெளியேறிய பொறாமைக்


காரன் இட்லர்.


வெற்றிவீரன் ஜெசி ஒவன்ஸ், அதற்குப் பிறகு வறுமை நிலையில் தான் வாழவேன்டியிருந்தது. குதிரைகளுடன் ஒட்டப்பந்தயம் ஒடி சம்பாதிக்கும் நிலைமை இருந்தது. சிகாக்கோ நகரத்து நீக்ரோ குழந்தைகளுக்குப் பயிற்சி யளித்தும். விளையாட்டுப் பிரதிநிதியாக பணியாற்றியும் நீக்ரோ அனாதைக் குழந்தைகளுக்கு வாழ்வில்லம் அமைத்தும், அவரது இனமாந்தருக்குத் தொண்டாற்றியும் 1980ம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ந் தேதி அமரரானார்.


கார்ல் லூயிஸ், சியோல் ஒலிம்பிக் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் புதிய சாதனைகளைப் படைக்க, தன்னைத் தகுதிக்குள்ளாக்கித் தயாராகிக் கொண்டிருக் கிறார்.


சுய முயற்சியுள்ள சுத்த வீரனை நாம் பாராட்டுவோம். வணங்கி மகிழ்வோம். அந்த வீர வணக்கம், நமக்கு தோன் றாத் துணையாக இருந்து உதவட்டும். உயர்த்தட்டும்.