பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எப்படி உணர்வது !


ஒரு பொருளை எடுக்கக் கையை நீட்டும் பொழுது, ஏதோ ஒரு பிடிப்பு’ பின்புறத்திலிருந்து இழுப்பது போல உணர்வு ஏற்பட்டுத் திடீரென்று தாக்குகின்ற ஒரு வலி... தொடந்து வேதனை.


ஒன்றை மேலே உயர்த்தும் பொழுது, அல்லது கையை மேலே தூக்கும்போது அல்லது ஆழ்ந்த சிந்தனையுடன் ஓரிடத்தில் அமர்ந்து பலருடன் பேசிக் கொண்டிருக்கிற பொழுது, ஒரு மின்னல் போன்ற வலி தோன்றி தொடர் கிறது. அதுதான் முதுகு வலியின் தொடககமாகும்.


திடீரென்று தோன்றி, குடைந்தெடுப்பது போன்ற குதர்க்கம் மிகுந்த வலியாகி, தொடர்ந்தும் இருக்கும். சில சமயங்களில் நீங்காதும் நிலைத்து நிற்கும. பல நேரங்களில் பளிச்சென்று வந்து மறைந்து போகும் பாங்குடையது முதுகுவலியாகும். j


ஏன் வருகிறது ?


முதுகுப் பகுதியானது மிகவும் உணர்ச்சிகரமான பகுதி


பாகும்,


அன்புடன் ஒருவரைத் தட்டிக் கொடுக்கும் பொழுது, முதுகு மிகவும் பாந்தமாக உதவுகிறது. அரவணைத்துக் கொள்ளும் போது, அங்கு ஆனந்தமான தடவல்களும் நிரவல்களும் நிம்மதியைக் கொடுக்கும்.


அடிக்கும் பொழுது ஆத்திரத்தைக் காட்டுவதற்கு முதுகில் அடிக்கும் வழக்கம், தொன்றுதொட்டு வரும் சுவை யான பழக்கமுமாகும்.