பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



எத்தகைய அபாயம் எழுந்தாலும், அதனைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் சாகசமும் அதன் மூலம் ஆத்ம சாந்தியும், அதன் பிறகு பெறுகிற சரித்திரப் புகழுமே முக் ஒயத்துவம் பெற்ற விளையாட்டுக்களாக அமைந்திருப்ப தையும் இந்தப் பிரிவு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


மிக வேகமாக ஒடுவது, திசையை மாற்றுவது, போன்று வாகனங்களை செலுத்துவது, நீர்ப்பரப்பில் மோட்டார் படகுகளை அதிவேகமாக விடுவது போன்ற விளையாட்டுக் கள் குறிப்பிடத்தக்கனவாகும்.


தண்ணிரில் முக்குளித்தல் (Diving), சீருடற் பயிற்சிகள், கம்பங்களில் தொங்கி சுழலுதல், மலையேறுதல், வானி லிருந்து பாராசூட் மூலம் விழுதல் போன்றவைகள் அபாய மானவைகளாக இருந்தாலும், ஆனந்தத்துடன் ஆர்வமாக ஈடுபடுதல் இந்தப் பிரிவின் எழுச்சிமிக்க சாகசங்களாகும்.


காரணங்கள் பல


ஆக, விளையாட்டுக்களில் நாம் ஏன் ஈடுபடுகிறோம் என்றால் காரணங்கள் பல உள்ளன.


அதாவது சமூக அமைப்பில் சமுதாயத்துடன் ஒன்றிப் போக, தேக நலம் காண, உடலை வருத்தி உன்னத உழைப் பின் மேன்மையை எய்திட உடல் அழகு காண ஆபத்திலும் அற்புத சாதனை காண, என்று பலவித காரணங்கள் உண்டு என்று நாம் அறிவோம்.


ஏன் இத்தனை காரணங்கள், காரியங்கள் என்றால், மனிதர்கள் யாவரும் இப்படித்தான். எல்லோரும் ஒரு மாதிரியாகவா இருக்கிறார்கள்? தனித்தன்மை கொண்ட வர்கள் அல்லவா? பல்வேறு விதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் அல்லவா! பல்வேறு விதமான வேடி; கையில் ஆசை கொண்டவர்கள் அல்லவா!