பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ ^ 3" சக்தி 2 3


து விடுகின்றன, என்பது மருத்துவர்களின்


பழக்கங்கள் உங்களை பக்குவமாய் காக்கும். புகைக்கும் பழக்கம் முதுகுத்தண்டின் தட்டில் வறட்சியை உண்டாக்கி வலியை ஏற்படுத்துகிறது. முதுகு பற்றிய அறியாமை யெல்லாம் இப்படிப்பட்ட முதுகுவலியை உண்டாக்குகிறது என்கிறார்கள்.


இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, உங்கள் உடலை நீங்கள் பத்திரமாகக் காக்க முயலுங்கள்.


எதனால் ஏற்படுகிறது என்ற காரணங்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.


உடற்பயிற்சி தான் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தி உயர்ந்த வாழ்க்கை வாழச் செய்கிறது என்ற உண்மையை உணருங்கள்.


வந்த முதுகு வலிக்கு மருந்தாகச் செய்கின்ற பயிற்சி களை, வருவதற்கு முன்பாகவும் செய்து திடமாக வாழுங்கள்.


முதுகுவலியை முற்ற விடுவதும், எத்தி விடுவதும் உங்கள் கையில்தான் உள்ளது. மருத்துவர்கள் பக்கபலம்தான் என்பதை, நீங்கள் உணர்ந்து கொண்டால், மகிழ்ச்சி வழி தான் வாழ்வீர்கள். இதுதான் உண்மையான வாழ்வின் வழியாகும்,