பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. உண்ணாவிரதம் ஓங்குக !


அற்புத மருந்து


நமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து, அதை உடல் நலியும் நேரத்தில், உண்மையாகக்


கடை பிடித்து. ஒழுங்காக நடை முறைப்படுத்தி, நலத்துடன் வாழ்ந்து சென்றனர்.


அந்த அற்புத மருந்துக்குப் பெயர் உண்ணா விரதம்.


மிருக இனமானது சுகவீனம் அடைகிற போது, சாப் பிடுகிற காரியத்தை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று, “கம்மா’ இருந்து விடுகிறது. அதன் வழியாக ஒரு அற்புத மான குணம் பெறுவதை மனித இனம் அறிந்திருக்க வேண் டும். அதை அப்படியே தாங்களும் பின்பற்றியிருக்க வேண் டும் என்றும் நாம் எண்ண இடமுண்டு.


ஆதி மனிதர்கள் இப்படி உண்ணாமல் இருந்து, தங்கள் தேகத்திற்குத் தாங்களே உதவிக் கொண்டிருக்கின்றார்கள்.