பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,6 டா கடா. எஸ். நவராஜ செல்லை.


ஜீரண சக்தி கிடைப்பதுடன், பிடிப்பு, படபடப்பு, பதை பதைப்பு, மூட்டு வலி போன்ற சிறு சிறு வேதனைகள் விளை விக்கும் வலிகள் எல்லாம், விலாசம் தெரியாமல் ஒடி மறை கின்றன.


கடுமையான உண்ணாவிரதம்


உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கலாம். உலகைத் தம் பக்கம் கவர்ந்திழுக்க: எதிரி களைத் தங்கள் பக்கம் வசப்படுத்த பல நிபந்தனைகளை பிறர் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணாவிரதத்தைக் கடைபிடிப்பவர்களும் உண்டு.


அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் இந்த உண்ணா விரத ஆர்ப்பாட்டம், பல சமயங்களில் உயிரிழப்பிற்கும் கொண்டு போய் விடும். இலங்கையில் தமிழர் பிரச்சினைக் காக 12 நாட்கள் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் எனும் வீரரை இங்கே நாம் ஒரு சான்றாக நினைத் துக் கொள்ளலாம்.


விரதமும் விவகாரமும்


ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புகள் ஒய்வு பெறுகின்றன. உல்லாசம் அ-ை கின்றன.


பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்: எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? எத்தகைய நிலை மைக்கு ஆளாகும் என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கும் போதே நன்கு புரியும்.


முதல் மூன்று நாட்கள் வரை, பசியை உடல் பொறு'ை யுடன் பொறுத்துக் கொள்கிறது. அதற்குப் பிறகு உறு?