பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உாக்டர் எஸ். நவராஜ செல்லையா


போய் விட்டார்கள். அந்தத் திருடனை ஒரு காலத்தில் கண்டு பிடித்து, அடித்துத் தீர்த்து விட வேண்டும் என்ற ஆவேசத்தில், தன் உடம்பைத் தயார் செய்தார். குத்துச் சண்டைக் கலையைக் கற்றுக் கொண்டார்.


திருடனைப் பிடிக்க முடிய வில்லை. ஆனால், உலக மக்களின் இதயங்களைத் திருடிக் கொண்ட சாகச வீரனாக முகமது அலி மாறி விட்டார். கோடி கோடியாகப் பணம். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் புகழ் !


திருடு போன அந்த சைக்கிளை நாம் பாராட்டலாம்.


சாதனை தந்த வேதனை


ஜெர்மானிய நாட்டில் லீபன் என்று ஒருவர் இருந்தார் அவர் சீட்டாட்டத்தில் சிறந்தவர். அதில் அவர் ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.


ஒரு சீட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு கலைத்து? கலைத்து (Shuttle) பண்ணி. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் அடுக்கி விட்டால், ஒரு தடவை என்று அர்த்தம்.


இப்படியாக, இவர் 42 லட்சத்து. 46 ஆயிரத்து, 28 முறைகள் (42, 46,028) செய்து விட்டார். இதற்காக, இவர் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் சீட்டுக்களைப் புரட்டிப் புரட்டி, 20 ஆண்டுகள் தொடர்ந்து செய்தார்.


உலக சாதனை தான். அவருக்கு வந்த புகழையும்: பாராட்டையும் கேட்க அவருக்குக் கொடுத்து வைக்க


வில்லை. பாவம் அவர் பைத்தியமாகி விட்டார்.


கிரிக்கெட்டில் 003


ஒரு கிரிக்கெட் வீரர் 14 இன்னிங்ஸ்) ! போட்டி களில் கலந்து கொண்டார். அவர் எடுத்த ஒ:. ங்கள்