பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


உங்களால் முடியும். நிச்சயம் முடியும். சாதிக்க முடியும் சரித்திரம் படைத்து உலகப் புகழ் பெற முடியும்.


ஆமாம்! சற்று அண்ணாந்து பாருங்கள். எல்லை யில்லாது விரிந்து கிடக்கும் வெட்டவெளி வானப் பரப்பிலே, பறக்கின்ற பறவைகளைப் பாருங்கள்.


அவைகள் பறக்கின்றன. ஏன் தெரியுமா? தங்களால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையை நிறைய நிறைத்துக் கொண்டிருப்பதால்தான்.


நம்பிக்கை அந்தப் பறவைகளை அந்தரத்தில் பறக்க வைக்க உதவுவது போல, இந்த உலகத்தில் உங்களைச் சிறக்க வைக்க முடியும். நம்பிக்கைதான் உங்கள் பக்க பலம். ஆத்ம பலம், ஆயிரம் யானைகளுக்குரிய யோக பலம்.


இத்தகைய நம்பிக்கையை துணையாகக் கொண்டு; இலட்சியமாக முனைந்து வாழ்ந்தவர்கள் தான், உலகப் புகழ் பெற்றார்கள் ஒப்பற்ற சர்த்திரத்தில் உன்னதமான இடத் தைப் பெற்றுக் கொண்டார்கள்.


நீங்கள் சொல்வதைக் கேட்டதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. ஆனால், எங்கள் சுற்றுப்புற சூழ்நிலை:


குடும்ப நிலை ஏற்றதாக இல்லையே என்று நீங்கள் எண்ணுவதை, என்னால் யூகிக்க முடிகிறது.


தடைகளும் விடைகளும்


ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருக்கிறது. இரவும் பகலும் அதன் இலட்சிய ஒட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தத் தடையும் எந்த அணையும் அதன் ஒட்டத்தை, முன்னேற்றத் தைத் தடை செய்யவில்லை. காரணம், அதன் இலட்சிய வேகம்தான்.