பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

37



யாட்டில் விருப்பம் கொண்டு, பயிற்சிகள் செய்ய ஆரம்பித்


தாள.


அதன்பயன் 18 வயதில் அவள் ஒலிம்பிக் பந்தயத்தில், 3 தங்கப் பதக்கங்களை வென்று காட்டினாள்.


வில்மாருடால்ப் என்பது அவள் பெயர். விடாத நோயை விடாமுயற்சியால், வெற்றி கொண்டு, வரலாற்றில் சிறந்த வீராங்கனை என்ற பெரும் புகழைப் பெற்றாள்.


வயதும் வலிமையும்


பிளாங்கர்ஸ் கோயன் என்ற ஹாலந்து நாட்டுப் பெண்


மணி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும், ஒலிம்பிக் பந்தயங்களில் பங்குபெற்று, நான்கு தங்கப்


பதக்கங்களை வென்று, உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினாள்.


[.


வயதாகிவிட்டால் வலிமை குறைந்துபோய்விடும் என்று கூறியவர்களின் கருத்தையெல்லாம் பொய்யாக்கிக் காட்டினாள்.


நீங்களும் இன்றே உங்கள் இலட்சியப் பயணத்தைத் தொடருங்கள். குறைகளை மறந்து விடுங்கள். குறிக்கோளை முனைப்பாகக் கொள்ளுங்கள். குறையாமல் பயிற்சிகளைத் தொடருங்கள். வெற்றி நிச்சயம். உலகப் புகழ்பெற என் நல்வாழ்த்துக்கள்.