பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. யாரால் வேகமாக ஒட முடியும்?


ஏன் முடிவதில்லை?


எல்லோராலும் வேகமாக ஒட முடிவதில்லை. எல்லோ ராலும் நீண்ட தூரம், நீண்ட நேரம் ஒட முடிவதில்லை.


குறைந்த தூரத்தை விரைவாக ஒடிமுடிக்கின்ற வீரர் களுக்கும், நீண்ட தூரத்தை நீண்ட நேரம் ஒடி முடிக்கின்ற, வீரர்களுக்கும், உடல் தோற்றத்தால் மட்டும் வித்தியாசம் இருக்கவில்லை. அவர்கள் உடல் அமைப்பிலும், தசை அமைப் பிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை, உடல் ஆய்வுவல்லுநர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.


இரண்டு தசைகள்


_LN) முன்புறமாகத் தள்ளி இயக்கும் ஆற்றல் படைத்த தசைகள் எல்லாம், வேகமாக ஒடுவதற்கும், மெதுவாக ஒடுவதற்குமே உதவுகின்றன. ஆனால் ஓரிரண்டு தசைகள் மட்டுமே, சற்று வித்தியாசமான அமைப்புடன், வித்தியாசமாக இயங்கும் அற்புதங்களாக விளங்குகின்றன .