பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

அதிசயங்கள் உலகிலே ஆயிரமாயிரமாய் இருக்கின்றன. இத்தனை அதிசயங்களுக்கும் சிகரமாக அமைந்திருப்பது மனித தேகம்தான்.

கண்ணுக்கு அழகு. காட்சிக்குக் கவர்ச்சி. செயலுக்கு இனிமை. செழிப்புக்கு திறமை. உழைப்புக்கு அற்புதம். உண்மையில், மனித தேகத்தைப் பொற்பதம் என்றே கூறலாம்.

அப்படிப்பட்ட அருமையான மனித உடலில், மறைந்து கிடக்கும் மகிமைகள் பற்றிய சில கருத்துக்களின் தொகுப்பு தான், மறைந்து கிடக்கும் மனித சக்தி என்ற இந்த நூலாக வெளிவருகிறது.

மனித சக்தியை விரைவில் தெரிந்து கொள்ளவும், வேகமாக வளர்த்துக் கொள்ளவும், வேண்டிய வகையில் பயன் படுத்திக் கொள்ளவும் கூடிய முக்கியமான இடம், விளையாட்டுத் துறையேயாகும்.

விளையாட்டுத் துறையில் விளைகின்ற சக்திகளை, நுண் திறமைகளை, வெளிப்படுத்திக் காட்டக் கூடிய குறிப்புக் களையும், கருத்துக்களையும் படித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன்.

இந்த நூலை அழகுற அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர்ஸ், ஆக்க வேலைகள் செய்து உதவிய R. ஆதாம் சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் நன்றி.

எனது நூல்களை வாங்கி, ஆதரித்து உதவும் தமிழ் அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

                                       அன்பன்

ஞானமலர் இல்லம் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா சென்னை - 17.