பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 (3 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


1. அலேக்டாசிட் அனேரோபிக் முறை : 100 மீட்டர், 200 மீட்டர் தூரம் ஒடுகிற பொழுது, வேக சக்தியை உண்டாக்கும் முறைக்குரிய பெயர். அதாவது ஒவ்வொரு நொடியிலும், பெரிய அளவில் சக்தியை உற்பத்தி செய்து விரைவாகத் தசைகள் இயங்கிட, சக்தியை அளிக்கும் முறை யாகும். Aerobie என்றால், பிராணவாயுவை அதிகம் பெறு கின்ற பயிற்சி முறையாகும், இங்கே அதிகமாகப் பிராண வாயுவை இழுத்து சுவாசிக்கும் நேரம் குறைவு என்பதால், ஏற்கனவே தசைகளில் தேக்கியும் பயிற்சி செய்தும் பழக்கி வைத்திருக்கின்ற ஆற்றல் மிகு சக்தியை, உடனே விரைந்து பெற்றுக் கொள்ளும் வகையில், இந்த முறையில் சக்தி உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.


2. நேரடியாக சக்தியை உற்பத்தி செய்கிற அலெக் டாசிட் அனேரோபிக் முறை போல் இல்லாமல், கிரியேட் 14.6%r LitgioGLl (Creatine Phosphate) 5156ir;3f600) # 5, சக்தியைப் பெற்று, அலெக்டாசிட் அனேர்பிக் துகள்களுக்கு (molecules), சக்தியைத் தந்து விடுகிற முறையாகும். அதாவது, ஒரு மண்டலத்திலிருந்து சக்தியை உருவாக்கி, நேரடியாகப் பணியாற்றுகிற அடுத்த மண்டலத்திற்கு வழங்குகிற உதவி முறை.


!


3. லேக்டாசிட் அனேரோபிக் முறை என்பது மூன்றாவது வழியாகும். உயிர்க்காற்று பயன்பட்டு, கரிய மிலவாயு ஆவது போல, உடலில் உள்ள குளுகோஸ் சர்க்கரைச் சத்துக்கள் உழைப்பில் பயன் பட்டு, லேக்டிக் ஆசிட்டாக மாறுகின்றன.


இப்படிப் பட்ட சத்துக்கள் எரிந்து சக்தியாகி, நேரடி யாகப் பணியாற்ற உதவுகின்ற முதல் மண்டலத்திற்குப் போவதாகும். இந்த உதவி முறை 100, 200, மீட்டர்