பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

55



- ~) + o - is , ஆசியையோ உருவாக்க வேணடிய அவசியம் இல்லாமல்


அவர்கள் வேட்டையாடினார்கள். குதிரை சவாரி செய் தார்கள். தங்களது அன்றாடத் தேவைகளுக்காக இடம் ஒட்டு இடம் பெயர்ந்து, அலைந்த அனுபவங்கள். அவர் களுக்கு உடல் வலிமையையும், உடல் நெகிழ்ச்சியையும், திறன் நுணுக்கங்களையும் உருவாக்கித் தந்தன.


காட்டிலே வாழ்ந்த மக்கள், வீட்டிலே தங்கியிருந்து வேளாண்மை செய்து, வாழ்கின்ற விவரம் புரிந்து கொண்ட நாட்களில், வித விதமான தேவைகள் அவர்களுக்கு உரு


வாயின. அந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள அவர்கள், அதிகமாக உடல் உழைப்பையே நாடவேண்டி


யிருந்தது.


அன்றாடத் தேவைகள், அவைகளைத் தீர்த்துக் கொள்ளும் வேலைகள் எல்லாம், மனிதர்களது மரபுத் தாழில்களாக மாறி வந்தன. உணவு அடிப்படைத் தவை என்பதால், உழவுத் தொழில் வளர்ந்தது. உடைகள் அவசியம் என்பதால் நெசவுத் தொழில் வளர்ந்தது, தற்


J)


zo) * O


காப்பு அவசியம் என்பதால், போரிடுவதற்கான ஆயுதங்கள். தற்காப்பு இடங்கள், வாகனங்கள் முதலியன உருவாக்கும் தொழில் நிலைகள், விரிவடைந்து கொண்டே சென்றன.


தொழிலே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே தொழி லாகவும் மாறி, அவனை ஆழ்த்தி விட்டிருந்தன.


ஆதிகால மக்களின் அன்றாட வாழ்க்கையை வெற்றிகர மாக நடத்திச் செல்ல உதவிய தொழில்களிலிருந்தே, பல விளையாட்டுக்கள், தோன்றி வளர்ந்து, செழித்தோங்கி சரித்திரம் படைத்தன என்பதற்கு எத்தனையோ ஆதாரங் கள் இருக்கின்றன.