பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



விளையாட்டுக்கள் பிறந்தன


‘உழவுக் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் ஒன்று கூடி பாட்டுப் பாடி வேலைகளைத் தொடங்கிய முறைகளே, கடவுள் வழிபாடாகவும்; காணிக்கை தரும் கடன்களாகவும், நடனமாடுகின்ற நிகழ்ச்சிகளாகவும், விருந்து படைக்கும் விழாக்களாகவும் வடிவெடுத்துக் கொண் டிருக்கின்றன.”


கூட்டங் கூட்டமாக சேர்ந்து வாழத் தொடங்கிய மக்கள், தங்களது தற்காப்புக்காகப் போரிடும் சாதனங் களையும், பயங்கர ஆயுதங்களையும் படைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். பல கூட்டங்களுக்கு இடையே அடிக்கடி போர்கள் நடத்தி வந்ததே, அவர்கள் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தன.


மிகப் பழங்காலத்தில் ஒருவரோடு ஒருவர் செய்து கொண்ட துவந்த யுத்தமே, இன்று மல்யுத்தப் போட்டியாக வும்; குத்திக் கொண்டும் தாக்கிக் கொண்டும் போட்ட சண்டையே குத்துச் சண்டைப் போட்டியாகவும்; வில்லை வளைத்து அம்பு விட்டு எதிரியை சாய்த்த முறையே இன்று வில் வித்தைப் போட்டியாகவும்; ஈட்டியையும் வேல்களை யும் எறிந்து தாக்கிய விதமே இன்று வேலெறிதல் போட்டி யாகவும் (JAVELIN), தட்டெறியும் போட்டியாகவும்: தடைகளைத் தாண்டித் தப்பித்துச் சென்ற பழக்கமே இன்று தாண்டும் போட்டிகளாகவும் மாறி மென்மை பெற்று ந்திரு க்கின்றன.


நமது வாழ்க்கையின் வரலாற்றை பல பகுதிகளாகப் பிரித்துக் காட்டிய அறிஞர்கள், ஆரம்ப காலத்து முன்னோர்களின் வாழ்க்கையை கவலையும் பதைப்பும் நிறைந்ததாகவும், அடுத்ததாக கண்டுபிடிப்புகளின் காலம் என்றும்; அதனைத் தொடர்ந்து எதிலும் அக்கறையின்மை