பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விளையாட்டால் படிப்பு பாழாகிறதா?


பொய்யும் புரளியும்


இப்படி யார் சொல்கிறார்கள்?


எல்லோரும் தான்.


படித்தவர்களும் சொல்கிறார்கள். பாமரர்களும் சொல் கிறார்கள். விளையாட்டை ரசிப்பவர்களும் சொல்கி றார்கள். விளையாட்டைப் பகைப்பவரும் வெறுப்பவரும் பேசுகிறார்கள்.


விளையாட்டால் படிப்பு மட்டுமா பாழாகிறது என்கி றார்கள்? இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, வாழ்வே வீணாகிப் போய் விடுகிறது என்கிறார்கள்.


அவர்கள் பேச்சை நாம் முதலில் ஏற்றுக் கொள்வோம்” அப்பொழுது தானே அதைத் தவறு என்று விளக்கிக் கூற


முடியும்.


முதல் குற்றச்சாட்டு - படிப்பு பாழாகிறது என்பது.