பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 6


விளையாடும் மாணவர்கள்


விளையாடுகிற மாணவ மாணவிகள், இளைஞர்கள் எல்லோருமே, விளையாட்டை விரும்பியே ஆடுகின்றார்கள்.


விளையாட்டின் மேல் உள்ள ஆர்வம், மற்றும் பற்று, ஆவேசம் காரணமாக, அவர்கள் அளவுக்கு அதிகமாகவே விளையாடி விடுகின்றார்கள். அதிகமான ஆட்டம்- உட லுக்கு அதிகமான அசதியைக் கொண்டு வந்து விடுகிறது.


வயிறாற உணவு சாப்பிட்ட பிறகு, வசதியான படுக்கை அமுைக்கிறது. உண்டதும் உறங்கி விடுகின் றார்கள்.


அதாவது, மாலை 6 மணிக்கு விளையாட்டு முடிந்து விட்டது என்றால், விளையாடும் மாணவர்கள், உடனே வீட்டுக்கு வந்து விடுவதில்லை.


தான் ஆடிய விளையாட்டைப்பற்றி விமர்சனம் அல்லது ஏற்பட்ட வேண்டாத நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதம், அல்லது அன்றைய சினிமா நாடகம் பற்றிய அரட்டை.


இப்படியெல்லாம் நேரத்தை ஒட்டிவிட்டு, எட்டு மணிக்கு வந்தால், ஏன் தாமதம் என்று வீட்டாரும் கேட்ப தில்லை.


பொறுப்பற்ற பெற்றோர்களின் பாராமுகத்தால், பிள்ளைகள் அந்த கேள்வியற்ற வரவேற்பை, தங்களின் கேளிக்கைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


ஏன் படிக்கவில்லை என்று பெரியவர்களும், பெற்றோர்


‘இரும் கேட்பதில்லை. காரணம் அதுதான் புதிராக இருக் கிறது.