பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

65



இயற்கையே விளையாடுகிறவர்களுக்கு வேண்டிய வசதிகளையும், உயர்வுகளையும் வழங்கியிருக்கிறதே! அது


தான் காரணம்.


விளையாட்டு உண்டாக்கும் வசதிகள்


• உலகத்தில் அதிசயங்கள் அநேகம் உண்டு. ஆனால் மனித உடலைப் போன்ற அதிசயம் வேறொன்றுமில்லை. வேறெங்கும் இல்லை’ என்று பேசுகிறான். சோம்போ கிளிஸ் எனும் கிரேக்கப் பேரறிஞன்.


நமது உடல் உறுப்புக்களோ இன்னும் அதிசயம் ஆனவை. அற்புதம் ஆனவை. எந்த உறுப்புக்கள் இதமாகவும், பதமாகவும் அடிக்கடி இயக்கப் படுகிறதோ, அவைகளே வளர்ச்சி பெறுகின்றன. வலிமை அடைகின்றன’’ என்பது தான் அது. *


அடிக்கடி பயன் படுத்தப்படும் வலதுகை, இடதுகையை


விட, வடிவிலும் வலிமையிலும் அதிகமாக இருப்பதை


H - i. H H H


நீங்கள் அறிவீர்கள். அதற்கான காரணம் என்ன தெரியுமா?


பயன் படும் உறுப்புக்களில் இரத்த ஒட்டம் அதிகமாகப் பாய்கிறது. உயிர்க் காற்று உள்ளே போய் மேய்கிறது. இவ்வாறு இரத்தம் பெற பெற, உறுப்புக்கள் செழிப்படை கின்றன. அதுபோலவே மூளையும் செழிக்கிறது.


முளையின் அளவும் தெளிவும்


மனித மூளைக்கும் ஊர்ந்து போகும் ஊர்வன உயிர் களின் மூளைக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு.