பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



13 டன் எடைக்கு மேலாக உள்ள ஸ்டிகோசோரஸ் என்றமுதலை போன்ற ஒரு பிராணிக்கு மூளையின் எடை 2 அவுன்ஸ், அதாவது 71 கிராம் தான். அதாவது உடல் எடைக்கும் மூளைக்கும் உள்ள விகிதம் 1 : 2,50,000 மடங்கு.


ஆனால், மனித மூளையின் எடையோ 3 பவுண்டு ஆகும். அதாவது 1.4 கிலோ. மனித எடைக்கும் மூளையின் எடைக்கும் உள்ள விகிதம் 1 : 50 ஆகும்.


ஒரு நாய், ஒரு மனிதக் குரங்கு, ஒரு மனிதன், இந்த மூன்று:பேருக்கும் உள்ள உடல் எடை ஒன்றாக இருந்தாலும் முளையின் எடை மட்டும் மாறுபடுகிறது. நாய்க்கு மூளை ; பவுண்டு (225 கிராம்). குரங்குக்கு மூளை 1 பவுண்டு: (456). மனிதருக்கு மூளை எடை 3 பவுண்டு.


மனிதன் ஏன் அறிவுள்ளவனாக இருக்கிறான் என்பது: இப்பொழுது உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்குமே!


மூளைக்கு உள்ளே


மூளைக்குள்ளே 11 ஆயிரம் மில்லியன் செல்கள் இருக் கின்றன. அதன் தொடர்புக்கு 10 ஆயிரம் மில்லியன் நரம்பு களும், அதன் பக்கபலத்திற்கு, 1000 மில்லியன் செல்களும் இருக்கின்றன.


எவ்வளவு இரத்த ஒட்டம் அதிகமாக மூளைக்குச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மூளையின் செல்கள் செழுமை யடைந்து, முழு மூச்சாகப் பணியாற்றத் தொடங்கி விடு கின்றன.


சாதரண மனிதர்களுக்கு சராசரி இரத்தம் தான் மூளைக்குப் போகிறது. அது எந்த அளவு என்பதையும் தெரிந்து கொள்வோம்.