பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழப்பங்கள் இவற்றை என்னென்ன என்று பகுத்துத் தொகுத்து, அதற்கான விளக்கங்களைப் பார்ப்போம்.


விளம்பரமும் விவாதமும்


எல்லாரும் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்று எல்லோருமே சொல்கிறார்கள். யோசனை கூறுகிறார்கள். புத்திமதி என்கிற பெயரிலே, பலவாறு புத்தி புகட்டு கின்றார்கள்.


உடற்பயிற்சி செய்தால், உடல் இளைத்துவிடும். எழிலாகத் தோன்றும்; திறமானதாகிவிடும் என்றெல்லாம் உற்சாகப் படுத்துகின்றார்கள்.


அவற்றை உண்மையாக்குவது போல, அற்புதமான விளம்பரங்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் வருகின்றன உத்வேகத்தைத் தருகின்றன.


‘14 நாட்கள் பயிற்சி செய்யுங்கள். உடல் உன்னத


மான அமைப்பையும் தோற்றத்தையும் அடைந்து, அழகாக மாறிவிடும்’. இப்படி ஒரு விளம்பரம் :


ஆறு வாரப் பயிற்சிகள் போதும், உங்கள் உடலில் அழகை ஏற்றும். ஆண்மையை பறை சாற்றும். ஆற்றலைக் கூட்டும். ஆனந்தத்தை மீட்டும்’. இப்படிப்பட்ட விளம்பரங் கள் பல.


“ஒரு நாளைக்கு 4 நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும். உற்சாகமான உடலை நீங்கள் பெற முடியும்’. இப்படி ஒரு விளம்பரம்.


‘12 நாட்களுக்குப் பயிற்சி செய்தால் போதும். பலமும் தலமும் பெறலாம்.