பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



விளம்பரங்கள் இப்படி வரும்போது, விவரங்கள் புரியாமல், விவாதங்களில் ஈடுபட்டு, சந்தேகப் பேர்வழி களாகப் படித்தவர்கள் மாறி, சங்கடத்திற்குள்ளாகின்ற சோதனை சூழ்நிலைகள்தான், இன்று அதிகமாகி இருக் கின்றன.


ைேடமுறை இடையூறுகள்


இப்படிப்பட்ட விளம்பரங்களைப் படித்த பிறகு: எப்படித் தான் செய்வது என்பதில்தான் சிக்கல். சிந்தனை களில் சிணுங்கல். ஆக, யோசனை சொல்கிறவர்கள், சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள். கேட்டவர்களோ கிறங்கிப்போய் கிடக்கிறார்கள். எது உண்மை. எது எளிமை, எது நடைமுறை என்பதில் தான் குழப்பம், இவற்றைத் தீர்த்து வைப்பது நமது கடமையாகிறது. சில சந்தேகக் கேள்விகளுக்கு பதில் இங்கே தந்திருக்கிறோம்.


1. தினந்தோறும் பயிற்சிகள் செய்தாகவேண்டுமா?


செய்தாக வேண்டும். செய்யத்தான் வேண்டும். தான் உரிய முறை. உண்மை நிலை.



வாரம் இரண்டு முறை போதும், முன்று முறை போதும் என்பது எல்லாம் வரட்டுவாதம். முரட்டு விவாதம். தினந்: தினம் பயிற்சிகளைச் செய்வது தான் தேகத்திற்கு நல்லது, சிறந்தது ஆகும். இது எப்படி?


உடற்பயிற்சி செய்யும்போது, பயிற். பெறுகின்ற தசை கள் பலம் பெறுகின்றன. பக்குவமான தரம் பெறுகின்றன. பயிற்சி செய்யாத போது, தசைகள் உழைப்பை இழந்து, சக்தியின் தரம் இழக்கின்றன.


வாரத்திற்கு மூன்று நாள் அல்லது, இரண்டு நாள் பயிற்சி செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். பயிற்சி