பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 3 K


மீண்டும் மீண்டும் தொடர்ந்து அந்த நிலைக்கு வந்து, வலியும் வேதனையும் இல்லை என்று அறிந்து கொண்ட பிறகே, பயிற்சியைத் தொடர வேண்டும்.


ஆகவே, மெதுவாக, பதமாகச் செய்யும் பயிற்சிகளே நல்ல பல பலன்களை நல்குகின்றன. நரம்புகள் நலிவடை யாமல், தசைகள் விறைப்படைந்து விடாமல், உறுப்புக்கள் உவப்பினை இழந்து விடாமல், பொறுப்பாகப் பயிற்சிகளைத் தொடர்ந்திட வேண்டும்.


எனவே, சந்தேகம் எழும் போது அதனை நிவர்த்தித்த பிறகே, பயிற்சிகளைச் செய்திட வேண்டும். சந்தேகத் துடன் தொடர்கின்ற காரியங்கள், சங்கடங்களையே கொடுத்து விடும் என்பதை மறக்கக் கூடாது.


உடற்பயிற்சிகளை செய்து வருகிறபோது :


1. இதயம் வலிமை பெறுகிறது. அதன் செயல் திறன், செழுமை பெறுகிறது. அதிக இரத்தத்தை இறைத்து, அவ்வப்போது நல்ல ஒய்வு பெற்றுக் கொண்டு, உயரமான தாக மாறுகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது.


2. அதிக சுவாசம் உள்ளிழுப்பதும், கரியமிலவாயு விரைவாக வெளியேறுவதும் எளிதாக நடைபெறுகிறது சுவாசத்தில் ஈடுபடும் தசைகள் வலிமையடைகின்றன. அதிக உயிர்க்காற்று இழுக்கப்படுவதால், இரத்தத்தில் உள்ள அம்மோகுளேபின் அதிக அளவு ஆற்றல் பெறுகிறது.


  • நரம்பு மண்டலம், நரம்புகளும் நேர்த்தியா வலிமையையும் திறமையையும் பெறுகின்றன. உடலில் சமநிலை, உறுப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்திறன், விரைந்து செயல்படும் ஆற்றல் (Reaction Time), சிறந்த தொடு உணர்ச்சி எல்லாம் செம்மை பெறுகின்றன.