பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நம் நாட்டு நளினங்கள்


நம் நாட்டு வீரர்கள் பயிற்சி செய்கிறார்கள் என்றால், அவர்கள் அதற்கு ஒரு முக்கியத்துவம் தருவதில்லை. வருடக் கணக்காக எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, போட்டி என்றதும் பொத்துக் கொண்டு வரும் வேகத்துடன்’ அங்குமிங்கும் ஒடி, அங்கங்களை அசைத்து விட்டு, இந்தப் பயிற்சி எனக்கு போதும், இனிமேல் தாங்காது என்று ஒய்வு எடுத்துக் கொள்ளும் உல்லாசவாசிகளாகவே உலா


வருகின்றனர்.


போட்டியில் கலந்து கொண்டால் போதும்...பத்து பேர் தங்களைப் பார்த்து விட்டால் போதும்; வெற்றி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. அதிலிருந்து ஏதாவது கிடைத் தால் போதும் என்று ஏங்கிகளாக வாழ்கின்றார்களே தவிர, இலட்சிய ஓங்கிகளாக இருக்க மாட்டேன் என்கிறார்கள்.


காரணம்?


அதற்குக் காரணம் அவர்களுடையது அல்ல. விளை யாட்டினை ஆண்டு கொண்டிருக்கும் மேல் நிலையாளர்கள் தாம் காரணம்.


ஆட்டுவித்தால் யார் தான் ஆடமாட்டார்கள்?


ஆட்டுவிக்கும் அறிவுடையாளர்கள், அதிகாரமுள்ள வர்கள் அடங்கிக் கிடக்கும் போது, ஆட்டப்படுபவர்கள் தட்டுக் கெட்டுத் தடுமாறி, அலையத் தானே நேரிடும்.


செடியும் கனியும்


செடியைக் குழியில் நட்டுவிட்டு, அதன் உச்சியில் கனி காய்த்துத் தொங்குகிறதா என்று பார்க்கும் பெரும் புத்திக்