பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

85

-


காரர்கள்; அதிகாரவர்க்கமாய் இருக்கும்போது, அடித்தளம் எங்கே உருப்படும்? உயர்வு பெறும்?


ஒரு நாடே தொடர்ந்து பயிற்சி பெறும் பொழுதுதான், - ஒரு பத்து பேர்கள் உலக அளவுக்கு உயர்ந்து விடும் திறமை யையும் தேர்ச்சியையும் பெற முடிகிறது.


பத்து பேர்களை வைத்துக் கொண்டு பத்து நாள் பயிற்சி முகாம், பத்து வாரப் பயிற்சி முகாம் என்றால், பத்திரிக்கையில் அது படிக்க நன்றாக இருக்கிறதே யொழிய, பலனளிக்கும் போது பாவ மாகத் தானே இருக்கிறது.


விளையாட்டுப் பயிற்சி


ஒரு விளையாட்டில் பயிற்சி பெறுவது தருவது என்றால், தினந்தோறும் விளையாடினால் போதுமானது என்று அறிவுடைய பலர் நம்மிடையே நம்பிக் கொண்டிருக் கின்றார்கள், நியாயமான எண்ணந்தான் அது.


தினந்தோறும், நிச்சயம் விளையாடினால், கொஞ்சம் தேர்ச்சியாவது வரும் என்றால், நம்மவர்கள் எங்கே தினமும் விளையாடுகின்றார்கள்? பயிற்சி செய்கின்றார்கள்?


அவர்களுக்கு அதற்கு நேரம் ஏது? வாய்ப்பு ஏது: வசதி ஏது? பொருளாதார உதவி ஏது? புறமிருந்து உற்சாகப் படுத்துவார் ஏது? தன்னம்பிக்கையோ தன் முனைப்போ, தன் இலட்சியமோ ஏது? ஏது? ஏது? i


புயற்காற்றில் புரண்டு வந்து குவிகின்ற இலைகள்போல, போட்டி என்றதும் கூடுகின்ற, கூட்டப்படுகின்ற ஆட்டக் காரர்கள் முயற்சி நிலை தானே நம்மிடையே நின்று நிலவி வருகிறது?