பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கொஞ்சம் மேனாட்டுப் பயிற்சி முறையைப் பார்ப் போம். அப்பொழுதுதான், நாம் எங்கே நிற்கிறோம் என்பதாவது புரியும்.


ஒரு உடலாளர் (Athlete) அல்லது ஒரு விளையாட்டு வீரர் இவர்கள் இருவருக்கும் பொருந்துகின்ற பயிற்சித் திட்டம் தான் நாம் கீழே கொடுத்திருக்கும் முறைகளாகும்.


பயிற்சி முறைகளை 4 வகையாக முதலில் பிரிக்கிறார் கள். அவை வருமாறு :


1. 5l G) i IG)5glb (poop (Control Method) 2. பயிற்சி முறை (Training Method)


3. உடல் நல முறை (Hygienic Method)


4. மன நல முறை (Psychological Method)


1. கட்டுப்படுத்தும் முறை


பயிற்சி பெறுபவர்களை முதலில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவேண்டும். அதாவது உடலாலும் மன தாலும் அவர்கள், தாங்கள் பயிற்சி பெற வந்திருக்கிறோம் என்பதாக, உணர்ந்து, நடந்து கொள்ள விழைவது தான்.


அந்தக் கட்டுப்படுத்தும் முறையை நயமாகப் பிரித்து நளினமாகக் கையாளுகின்றார்கள்.


(அ) சுயக்கட்டுப்பாடு


‘எண்ணறச் சொல்லி, எழுதிப் படித்தாலும் கடைய னுக்குப் புத்திக் கால் மாட்டில் தான்’ என்பது ஒரு பழமொழி.