பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 9 3


நடந்து செல்லுங்கள்’ என்று எந்தப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகின்றார்கள்?


வீட்டுப்பாடம் செய்தாயா? பாடம் படித்தாயா? என்று மூளைக்குள்ளே முரட்டுத்தனமாக விஷயங்களைப் புகுத்திப் பார்க்கின்ற பெற்றோர்கள், அக் குழந்தைகள் ஆரோக்கிய மற்றுப் போய், அடிக்கடி நோய்வாய்ப் பட்டாலும், என்ன காரணம் என்று எண்ணிப் பார்ப்பதில்லையே!


முளையிலேயே செடிகளை வாடி வதக்கிவிட்டு, பின்னாளில் அவை முற்றி முதிர்ந்து தீஞ்சுவைக் கணிகளைத் தந்து விட வேண்டுமென்று ஒரு தோட்டக்காரன் நினைத் தால், அவனை என்ன வென்று நீங்கள் அழைப்பீர்கள்!


ஒடி விளையாடி உற்சாகம் காணுகின்ற குழந்தைகளை, கூடி விளையாடி குது.ாகலம் கண்டு பொது அறிவு நிறைய வாய்ப்பு பெறும் குழந்தைகளை, கட்டிப் போட்டது போல, ஒரிடத்தில் இருட்டறையில் சிறை வைத்தது போல அமர்த்தி, காலம் முழுவதும் அமர்த்திக் கொண்டே நீங்கள் போனால், பின்னால் அவர்களோ சக்தியுள்ளவர்கள் ஆவார் களா? அவர்கள் மூலமாக, வெற்றி பெற்றுத் தங்கப்பதக்கம் வேண்டு மென்றால் எப்படி முடியும்?


நான் சொல்வதற்காகக் கோபப்படக் கூடாது. மற்றவர்


கள் சொல்வதைத் தான் நானும் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.


ஒ( குழந்தை வளர்கிறது என்றால், நாளுக்கு நாள், உடலால் வளர்கிறது. அறிவால் வளர் கிறது என்று தானே அர்த்தம்.


மக்கள் மரம் போல் வளரக் கூடாது. மனம்போல் வளர வேண்டும்.