பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

95

.


நமது நாட்டுக் குழந்தைகள், உத்வேகமுள்ள குழந் தைகள் தாம். அவர்களின் ஆர்வமெல்லாம் அநியாயமாக


விரயமாக்கப்பட்டு வருகின்றன.


அறிவுக்கு வழி காட்டாமல், வழி வகுக்காமல் விட்டு விட்டால், அடாவடித்தனம் தானே மிகுதியாக வரும்!


வளர்ந்து வரும் உடல் வலிமையை இளமையை சரியாக செப்பனிடாமல் போனால், சரிவுதானே இலட்சியமாக


இருக்கும்!


நமது நாட்டில் உற்பத்திகளிலே முதலிடம் வகிப்பது குழந்தை உற்பத்திதான்.


அதற்கு அடுத்த இடம் வகிப்பது சினிமா.


உலகத்தில் தலை சிறந்த சினிமா தயாரிக்கும் நாடாக நமது நாடு விளங்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக் கோடு செயல்படுவதில், எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. மகிழ்ச்சிதான்.


நமது நாட்டு மக்களை கவலைகளிலிருந்து வெளி யேற்றி, சளிப்பில் ஆழ்த்தி விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு காரியம் ஆற்றுவது போற்றுதற்குரியது தான்.


அதற்காக, அவர்களை காலையில் 11 மணியிலிருந்து இரவு இரண்டு மணி வரைக்கும், அடைத்து வைத்திருக்கும் அரங்கங்களில் போட்டுப் பூட்டிவைத்து, மாட்டிக்கொள்ளச் செய்வது நல்லதா என்று எண்ணிப் பார்ப்பது தவறில்லை என்று நினைக்கிறேன்.


மனித சக்தி மகாசச்தி அல்லவா! மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பது நீங்கள் அடிக்கடி கூறுகின்ற வாசகம் அல்லவா!