பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

9

கே. பி. நீலமணி 9.

"எங்கே அவர்கள்?' என்று கணவர் கேட்கு முன்பு, 'முன் ரூம்லே உட்கார்த்தி வச்சிருக்கேன்' என்று கூறி விட்டு அடுக்களைக்குச் சென்று விட்டாள் கல்யாணி அம்மாள்.

பாடம் சொல்லிக் கொள்ள வந்திருப்பவர்கள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும், ஒர் ஆணும். அவர்களை பெல்பாட்டமும் டைட்ஸ்ஸுமாக எதிர்பார்த்த பாக வதர், அறைக்குள் நுழைந்ததும் பிரமித்துப் போனார்!

அழகே உருவான அந்த இளம்பெண், கைத்தறிப் புடவையைக் கட்டிக் கொண்டு, தலையைப் பின்னிப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். அந்த வாலிபன், தூய வெண்ணிற ஜிப்பாவும், கதர் வேஸ்டியுமாகக் காட்சியளித் தான். அவர்களது இந்த முதல் தோற்றமே பாகவதரது உள்ளத்தில் ஒருவித நம்பிக்கை ஒளியை ஊட்டுவிப்பதாக இருந்தது.

பாகவதரைக் கண்டதும் இருவரும் ஏக காலத்தில் தங்களது ஆசனத்தினின்றும் எழுந்து நின்று; கைகளைக் குவித்த வண்ணம், வணக்கம் ஐயா’’ என்று ஏகோபித்த குரலில் கூறினர். பாகவதரது கரமும் அவரையுமறி யாமல் உயர்ந்து விட்டது. அவர்களை ஆசனத்தில் அமரும்படி பணித்தார்.

'கச்சேரிகளுக்கு வெளியூர் போய்விட்டு இன்னிக்கு காலமே ஆறு மணிக்குத்தான் வந்தேன். பத்து நாளைக்கு முன்னே சடகோபன் வந்தப்போ பஞ்சாங்கத்தைப் பார்த் ததிலே இன்னிக்கு விட்டா இந்த மாசத்திலே நல்ல நாளே இல்லேன்னுதான் உங்களை வரச்சொல்லியிருந்தேன். ஆனால் அலைச்சல்லே எப்படியோ மறந்துட்டேன்...' என்று பாகவதர் கூறிக்கொண்டு வரும்போதே, "பரவா யில்லை ஐயா; நாங்கள் வேண்டுமானால் இப்போது போய் விட்டு சாயங்காலம் வருகிறோம். நீங்கள் கொஞ்சம்