பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மலருக்கு மது ஊட்டிய வண்டு

12 மலருக்கு மது ஊட்டிய வண்டு.

நகரத்தில் ஒரு மோட்டார் தொழிற்சாலை வைத்திருக் கிறார். இவள் பெயர் சோபியா (Sophia), சிறு வயதி. லேயே அப்பா, அம்மாவை இழந்துவிட்டாள். அம்மா வைப் பெற்ற பாட்டியோடுதான் 'கிளாவ்லாண்டில்" (Glawlands) இருக்கிறாள். இரண்டு பேரும் ஒரே

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றோம். நாங்கள் துாரத்து உறவினர்கள்' என்று பாகவதர் கேட்ட ஒரு கேள்விக்கு, டேவிட் சுருக்கமாகத் தங்களுடைய

வாழ்க்கைக் குறிப்பையே கூறிவிட்டான்.

'ரொம்ப சரி' என்று கேட்டுக்கொண்ட பாகவதர் இருவருடைய நோட்டிலும் சரளி வரிசைகளை எழுதிக் கொடுத்து, 'இதுதான் கர்நாடக சங்கீதத்திற்கு ஆரம்பப் பாடம். இது, மாயா மாளவ கெளள ராகத்தில் அமைஞ். சிருக்கு. முதல்லே, சுருதியோடேயே சேர்ந்து குரலை நிறுத்திப் பழகறதுக்கு, ஷட்ஜமம், பஞ்சமம், மேல் வுட் ஜமம்' என்கிற மூணு ஸ்தாயிக்கும் , ஸ- ப-ஸ்-ன்னு பாடிப் பழகனும்.

அதாவது, உங்க சங்கீத்த்திலே சுப்ரானோ' (Suprano) * _2;3øl_ m * (Alto) *@l_aoriř” (Tenar) *Ĝi jařo* (Base) ன்னு வாய்ஸ் ரேஞ்ச் (Voice range) இருக்காப் பிலே; பாடற அவரவர்களுக்கு சாரீரம் இடம் கொடுக்கற மாதிரி, வசதியான ஒரு சுருதியைத் தேர்ந்து எடுத்து டுண்டு, இந்த ஸ-ப-ஸ்’ வைப் பாடணும். இப்போ நான் பாடறேன். பிறகு நீங்கள் தனித்தனியே பாடலாம்' என்று கூறியபடி, மடியிலிருந்த தம்பூராவின் தந்திகளை மீட்டினார். அதன் இனிய நாதம் அறை எங்கும் பரவியது.

தாம் சொல்விக் கொடுப்பதை சுருதியோடு சேர்ந்து

டேவிட்டையும், சோபியாவையும் தனித் தனியே, திரும்பத் திரும்பப் பாடிச் சொல்லிக் கேட்டபோது ,