பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மலருக்கு மது ஊட்டிய வண்டு

14 மலருக்கு மது ஊட்டிய வண்டு

பிடிக்கிறபோது படுகிற அவதியையும் கண்டு பாகவதர் தம்பதியர் மிகவும் ரசித்தனர். ஆனால், விரைவிலேயே இலையில் சாப்பிடுகிற கலையிலும் அவர்கள் தேறி விட்டனர்.

இப்படி எல்லா விஷயங்களையும் கிரகித்துக் கொள்ள இருக்கிற துடிப்பைப் போலவே, இசைப் பயிற்சியிலும் அவர்கள் அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பற்றி பாகவதர் மனைவியிடம் அடிக்கடி கூறுவார்.

|

டேவிட்டும், சோபியாவும் விரைவிலேயே கர்நாடக இசையில் மிகப் பிரபல பாடகர்களாகச் சோபிக்கப் போகிறார்கள்' என்று அவர் கூறும் போது, அந்தச் சொற்களைக் கடந்து தன் கணவருடைய உள்ளத்தின் அடித்தளத்தில் புண்ணாகிக் கிடக்கும் ஏமாற்றத்தின் எதிரொலியை -வேதனையை--கல்யாணி அம்மாளாலும் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டியவன் தன்னுடைய மகனேயல்லவா!

தன் பிள்ளை பாபுவைப்பற்றி பாகவதர் ஆரம்பத்தில் பெரிய கனவெல்லாம் கண்டு கொண்டிருந்தார். அவனுக் குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து அவன் பெரிய வித்து வானாகப் பிரகாசிப்பதைக் காண வேண்டுமென்று அவருக்கு அளவு கடந்த ஆசை. ஆனால் அந்த ஆசையெல் லாம் அரும்பிலேயே கருகி விட்டது.

ஒரு வித்தை பரிணமிக்க வேண்டுமானால், அதைக் கற்றுக்கொள்கிறவனுக்கு அந்த வித்தையின் மீது அளவு கடந்த ஆர்வமும், ஆழ்ந்த பற்றும் தனியாத தாகமும் இருக்க வேண்டும். உள்ளத்திலிருந்து பீறிட்டு வரக் குமுறிக் கொண்டிருக்கும் அந்த ஊற்றை, அல்லது எழுச்சி யைச் சிறந்த வழிமுறைகளால் சோபிக்கச் செய்யத் துரண்டி விடுகிற ஒன்றுதான் குருவின் பணியே அன்றி: இடனைத் தேடிச்சென்று, வித்தையின்மீது அவனுக்கு