பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மலருக்கு மது ஊட்டிய வண்டு

20 மலருக்கு மது ஊட்டிய வண்டு.

'அது உங்கள் தலைவிதி!' 'அதற்கு நான் என்ன செய்ய முடியும், சோபியா?"

'நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்! கண்ணை மூடிக்கொண்டு, முதலில் கழுத்தில் தொங்குகிற பிளாஸ்டிக் மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு, தலையை கிராப் பண்ணிக் கொண்டு வாருங்கள். ஐ ஹேட் யுவர் ஹிப்பி ஸ்டைல்’, இப்படிக் கூற எனக்கு என்ன உரிமை இருக் கிறது என்று கேட்பீர்களானால், நீங்கள் என்னை மன் னித்து விடுங்கள்; நான் என் பேச்சை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். "வால்ட் லிட்மனையும்', நோபல் பரிசு பெற்ற கவிஞர் எலியட்டையும் போன்ற எத்தனையோ மேலை மேதைகளை இந்தியக் கலாசாரம் கவர்ந்திருக் கிறது. மேற்கு கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கும் காலம் இது. சூட்டும், கோட்டும் அல்ல; பாண்ட்டும், ஸ்லாக்குமே பிடிக்காமல், ஜிப்பாவும், வேட்டியுமாகக் காட்சியளிக்கும் டேவிட், கிராப்பைத் துறந்து குடுமி வைத்துக் கொள்வதைப் பற்றி யோசித்துச் கொண்டிருக். கும்போது, நீங்கள் ரிப்பன் வைத்துப் பின்னலாம் போல் முடி வளர்க்கிறீர்களே?’’

சோபியாவின் வேகம் நிறைந்த, நீண்ட பேச்சைக் கேட்டு, ஒரேயடியாகக் குழம்பிப் போய், ஏதோ பலத்த சிந்தனை வயப்பட்டு உட்கார்ந்திருந்த பாபு, சிறிது நேரம் வரை பேசவேயில்லை. அவன் மனம் ஒரேயடியாக குழம்பிப் போயிருந்தது. அதுவரை கண்ணுக்குப் புலப் படாதிருந்த ஏதோ ஒன்று புலப்படுவது போலிருந்தது.

  • புறப்படலாமா சோபியா?” என்று கேட்டுக் கொண்டே சற்றைக் கெல்லாம் உள்ளே நுழைந்த டேவிட் பாபு இருக்கிற நிலையைப் பார்த்து, 'என்ன, சோபியா வோடு கோனி"பாட்டைக் கேட்ட மயக்கம் இன்னும் தெளியவில்லையா? இந்த ‘பாப் மியூசிக்” என்ன, சில