பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

21

கே. பி. நீலமணி 21.

பேவரிட் பாஃக் ஸாங்ஸ் கோப்ஸெல்'ஸையும் கேக்க ணும். ப்ளுஸ்ஸோட, யூ ஸ்டெப்டு அவுட் ஆஃப் எ ட்ரீம்' என்கிற ஒரு பிரமாதமான பாட்டிலே, சோபியா வோட சில அபாரப்பிடிகளைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் பாபு என்று கூறி முதுகில் தட்டிக் குவிப் படுத்தினான் டேவிட்.

ஆனால் பாபு இழந்த உற்சாகத்தை மீண்டும் பெறவேயில்லை. யூ ஸ்டெப்டு அவுட் ஆஃப் எ ட்ரீம்' என்று லேசாக அவனது உதடுகள் முணுமுணுப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டே, டேவிட் விடைபெற்றபடி காரில் ஏறிக் கொண்டான். சோபியா இயந்திரம் போல் அவன் பின்னே சென்றாள்.

பாகவதர் ஊரிலிருந்து வந்ததும் பாடத்திற்கு வந்தி ருந்த டே விட்டிற்கும், சோபியாவிற்கும் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது!

கழுத்து மாலையைக் கழட்டி எறிந்துவிட்டு 'டி'க் காகக் கிராப் செய்து கொண்டிருந்த பாபு, வேட்டி, சட்டையுடன் கம்பெனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தான். பாபுவினுடைய இந்த மாறுதல் சோபியாவி னுடைய உள்ளத்தில் சுரீர்” என்று தைப்பது போலிருத் தாலும், அந்த வலி அவளுக்கு இதமாகவே இருந்தது. 'தன்னுடைய வார்த்தைக்கு பாபு இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறானா? என்று எண்ணிப் பார்த்தபோது அவளுக்குக் கண்ணில் நீரே வந்து விட்டது. ஆனால் அந்தக் கண்ணிரின் கடையிலே ஒரு துளி நம்பிக்கைக் கீற்றும் ஒளி விடுவது போல் சோபியா உணர்ந்தாள்.

அன்று பாடம் முடிந்து அவர்கள் ரூமிற்குச் சென்ற போது கேபிள்' ஒன்று காத்திருத்தது. டேவிட்டையும், ஸோபியாவையும் உடனே புறப்பட்டு வரும்படி. சோபியா, அப்போது புறப்பட விரும்பவில்லை. ஆனால்