பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மலருக்கு மது ஊட்டிய வண்டு

26 மலருக்கு மது ஊட்டிய வண்டு

உங்க ஆசியினாலே வெஸ்லயன் பல்கலைக்கழகத் திலே கர்னாடிக் மியூசிக் லெக்சரர் உத்தியோகம் கெடச் சிருக்காம்.'

'பேஷ்...பேஷ்...அப்புறம் என்ன எழுதியிருக்கான்?" பாகவதருடைய குரலில் ஆர்வமும், மகிழ்ச்சியும் உச்ச நிலையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.

"நான் அடுத்த மாசம் அமெரிக்கா புறப்பட்டு வர்றதா எழுதியிருந்த கடிதம் கிடைத்ததாம். இது ஒன்றுதான்...' என்று சோபியா கூறிக் கொண்டிருக்கும் போதே, அதிருக்கட்டும், நாங்கள் உன்னை இங்கிருந்து அனுப்பினான்னா நீ அமெரிக்காப் போகனும்?' என்று சிரித்தபடி அவளிடம் கூறிய கல்யாணி அம்மாள், "நிறைய எழுதியிருக்கே.டேவிட் வேறே யாரைப்பத்தி இன்னும் எழுதியிருக்கான்?' என்றாள்

"உங்கள் பிள்ளையைப் பத்தித்தான்!” சோபியா சமாளித்தாள்.

'ஏன், பாபு தன் கைப்பட ஒண்னும் எழுதல்லியா' கல்யாணி அம்மாவுக்குத் தன் பிள்ளையின் கையெழுத் தைப் பார்க்க வேண்டும்போல் இருந்ததோ என்னவோ? அந்தத் தாயின் அளவு கடந்த ஆவலை ரசித்தபடியே, 'நிறைய எழுதியிருக்கிறார்!’ என்றாள் சோபியா.'

'என்ன எழுதியிருக்கான்?’’

'உங்க பிள்ளை இப்போது அமெரிக்காவிலே நிறைய எடங்களிலே கர்நாடக சங்கீதக் கச்சேரி பண்ணறாறாம்.'

சோபியா இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன்னர், என்ன? சரியாப் பாத்துப் படி” என்று பரபரப் புடன் கூறினார் பாகவதர். கடிதத்தில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்பது அவர் எண்ணம்.