பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

33

கே. பி. நீலமணி - 33

கம்ப்பார்ட்மெண்டில் டி.டி.இ. தாவி ஏறினான். வண்டி ஸ்டேஷனிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது.

அந்த இளம் டி. டி. இ. தன்னுடைய தொழிலின் போது எண்ணற்ற குடும்பப் பெண் களை, குடும்பமற்ற பெண்களை, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்திருக் கிறான். ஆனால், எவரிடமும் அவன் இதுவரை காணாத ஒருவித கவர்ச்சி, அழகின் ஆகர்ஷணம், இன்னும் அவ னுக்கே விளக்கத் தெரியாத செளந்தரியத்தின் சிறப்பியல் புகள் அனைத்தையும் அவளிடம் ஒருசேரக் கண்டு விட்ட பிரமை, அல்லது மயக்கம் தான், அவளை அவன் முதன் முதலாக வண்டியில் பார்த்தபோது ஈர்த்து விட்டது.

எப்படியோ ஒரு மாறான சூழ்நிலை உருவாகி அவ ளாகவே இப்படியோர் இணக்கம் தெரிவித்துத் தன்னிடம் வேண்டி நின்றபோது

அவனால் ஒரு கணம் தன்னுடைய செவிகளையே நம்ப முடியவில்லை. ஒடுகிற ரயிலில் அல்ல, பறக்கிற விமானத்தில் செல்லுவது போலவே இருந்தது.

வண்டி அரக்கோணம் ஸ்டேஷனில் நின்றது. வேக மாக வி. ஆர். ரூமுக்குள் நுழைத்த அவன், சில ஸ்வீட் வகைகளையும்; பலகாரங்களையும் கட்டி வாங்கிக் கொண்டான். ஸ்டேஷனில் ஆற்ற வேண்டியிருந்த சில பணிகளையும் முடித்துக் கொண்டு, வண்டி புறப்படும் போது அவள் இருக்கும் கம்ப்பார்ட் மெண்ட்டுக்குள் ஏறிக் கொண்டான்

அநேகமாக அவள் துரங்கிப் போயிருப்பாள் என்று எண்ணியதற்கு மாறாக விழித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வையிலிருந்து எவ்வித விருப்பு வெறுப் புக்களையும் அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

ஆனால், சற்று முன்பு வரை அவள் எதற்காகவோ அழுது

ம-3 ---