பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

35

கே. பி. நீலமணி 35

சூழ்நிலையால் தயங்கிய குரலிலேயே கூறினாள்: "அதெப்படித் தூங்க முடியும்...?”

o அவளுடைய இந்த வார்த்தையைக் கேட்டதும்

அவனுக்கு ஒரு வித மகிழ்ச்சி ஏற்பட்டது....

"இந்தா... இதெல்லாம் உனக்குத்தான். எடுத்துக்கோ. இங்கே நமக்குள்ளே என்ன வித்தியாசம். சேர்ந்தே சாப்பிடுவோம்-இந்தா...' கையிலிருந்த ஜாங்கிரியை அவளது வாயருகே கொண்டு சென்றான். சட்டென்று' அவள் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

சற்று முன்புவரை அவன் யாரோ: அவள் யாரோ. ஆனால் இப்போது-இந்தக் குறுகிய காலத்திற்குள்-எத் தினை உரிமையுடன் இந்த டி. டி. இ. பழகத் தொடங்கி விட்டான். பார்க்கப்போனால், உண்மையில் இதற் கெல்லாம் வித்திட்டவள் அவளேயல்லவா?

விதி ஏன் என்னை இப்படியொரு பாக்கு வெட்டியில் கொண்டு வந்து சிக்க வைத்துவிட்டது?’ என்று எண்ணிய போது அவளால் துக்கம் தாளமுடியவில்லை. தன்னையும் மீறிப் பெரிதாக அழுது விட்டாள்.

டி. டி. இ. ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள். இந்தா, இப்ப நீ எதுக்காக அழறே?’-ஒர் அதட்டு அதட்டினான்.

நான் வேறே எதுக்காகவும் அழல்லே... அம்மா நெனப்பு வந்தது...' குனிந்தபடி வார்த்தையை மென்று விழுங்கினாள். வேறு என்ன சொல்வது என்று அவள் தவித்துப் போனாள். அவள் இப்படியொரு விபரீத 'அர்த்தத்துடனா சொன்னாள். அவள் ஏதோ ஒரு போக் கிற்காக என்ன சொன்னாலும் கேட்கிறேன்' என்று சொன்னதை அவன் இப்படி துஷ்பிரயோகம் செய்ய