பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

41

கே. பி நீலமணி 41.

இருந்து எடுத்த ரசீதைச் சரி பார்த்துக் கையெழுத்திட்டு

அவளிடம் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றார்.

இயந்திரம் போல், கையில் அந்த டி.டி.இ. கொடுத்து விட்டுச் சென்ற ரசீதைப் பிரித்துப் பரபர'வென்று படித் தாள். 'சென்னை சென்ட்ரல்- டு- குத்தி'- அவள் போகவேண்டிய ஊர் அதுதான்.

முதல் வகுப்புக்குப் பணம் கட்டியிருந்தது. எத்தனை பெரிய தொகை!

அவள் மீண்டும் ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்ட வள் போல் மடித்த அந்த ரசீதை மீண்டும் பிரித்துப் படித்தாள்.

வி. சரோஜா-என்று அழகாக அதில் அவள் பெயரும் அந்த இடத்துக்கு நேரே எழுதப்பட்டிருந்தது.

வண்டி சரியாக குறித்த நேரத்திற்கு 7-20-க்கு குத்தி’ -ஸ்டேஷனில் வந்து நின்றது.

தோல் பெட்டியுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒர் இரவில் ஏறிய அதே பிளாட் பாரத்தில் இன்று ஒர் இனிய காலை நேரத்தில் அதே தோல் பெட்டியுடன் அவள் இறங்கி நின்றாள். இந்த இடைக்காலத்திற்குள்தான் எத்தனை பொருள் இழப்பு; ஏமாற்றம், படிப்பினை!

-ஆனால் அத்தனையையும் விட, அரிதாகச் சந்திக்க நேர்ந்த ஒரு மனித ரத்தினத்தை உறக்கத்தில் கை நழுவ விட்டுவிட்ட சோதனை; அந்த மனித தெய்வத்திற்கு நன்றிக்கடன் கூடச் செலுத்தக் கொடுத்து வைக்காமற் போன வேதனைதான் அவள் உள்ளத்தைத் தகர்த்துக் கொ ண்டிருந்தது.

பிளாட் பாரத்தில் குறுக்கும் நெடுக்கமாய் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் மனிதக் கூட்டங்களின் மத்தி கயில் அர்த்தமற்று அவளது விழிகள் அவனைத் துழாயின