பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

43

ஒரு கிளைப் பறவைகள்

காரியாலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காசிராஜனின் விழிகள், தயார் நிலையில் இருந்த ஜாக்கி ரதை உணர்வுகளை மீறி அல்லது ஏமாற்றி, எப்படியோ ஒரு கணத்தில் அந்த நடைபாதை விளம்பரத்தை மேய்ந்து விட்டன. இது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிதான்.

அந்தச் சிகப்பு முக்கோணத்தின் கூரிய முனைகள் என்னவாகத்தான் நெஞ்சை நெருடுகின்றன! கோணத் துக்குச் சிவப்பு வர்ணம் பூசியிருக்கிறார்கள். அளவுக்கு மீறிப் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொண்டால் தொல்லை என்று எச்சரிக்க. ஆனால் தொல்லையும் துயரமும் அளவை மீறுபவர்களுக்கு மட்டுந்தானா? அளவையே அடைய முடியாதவர்களுக்கு?

மணவாழ்வினைப் பெற்றும், மழலை இன்பம் காணாமல் - அதாவது காண இயலாமல் - அந்த அன்புக் கனிக்காகவே வாழ்நாளெல்லாம் ஏங்கித் தனிமரமாகவே நிற்பது வேதனை அல்லவா? குடும்பப் பெண்ணொருத்தி இதனால் அடையும் துயரத்தின் ஆழம், அதன் தன்மை, உரிமையுள்ளவர்களிடமிருந்து அவள் சுமக்கும் சுடு சொற்கள், ஏற்கும் அநுதாபப் பார்வைகள், பட்டங்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டதனாலேயே-அப் படிப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும் ஒருத்தியுமாக,