பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மலருக்கு மது ஊட்டிய வண்டு


பிள்ளையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அம்மாவுக்குத் துக்கம் தாளவில்லை.

"லங்கிணி! சரியான சொக்குப்பொடி போட்டுத்தான் உன்னை மயக்கி வெச்சிருக்கா இல்லேன்னா, உன் நல்லதுக்குச் சொல்லற பெத்த தாயாரையே இப்படி எடுத்தெறிஞ்சு பேசுவியா? ஐயோ! எப்படி இருந்த பிள்ளை, எப்படி மாறிப் போயிட்டான்! பாவி, அவ நல்லா இருப்பாளா? தாயின் ஓலம் அவலமாக ஒலித்தது.

“அம்மா, உன்னை இப்ப நான் என்ன சொல்லிப்பிட்டேன்? எதுக்காக இப்பிடி அவளைச் சபிக்கிறே?”

"இன்னும் நீ என்னடா சொல்லணும்? சொல்ல வேண்டியதை எல்லாந்தான் உன் மனசைத் திறந்து கொட்டிப்பிட்டியே! ஆனா, நான் சொல்லறது இப்போ ஒண்ணும் நல்லதா உனக்கு விளங்காதுடா. உடம்பிலே இளரத்தம் ஓடற வரைக்கும் புரியவும் புரியாது. நாளைக்குத் தலையைக் காலெ வலிக்கறபோது, தள்ளாத காலத்திலே தலைமாட்டிலே நம்ம பிள்ளைன்னு ஒருத்தன் இல்லையேன்னு தோனும் நம்ம குடும்பம் இப்படி நூல் அறுந்த காத்தாடியாப் போயிடுச்சேன்னு அப்போ புரியும்டா ராஜா, அப்பப் புரியும்.'

சோடா புட்டியைத் திறந்ததும், குபீரென்று வழியும் நுரையைப்போல அந்தத் தாயின் அடக்கமுடியாத துயரம்; இந்த முயற்சியுடன் எழும்பி வடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறான இச்செயலால் அவள் களைப் படைந்துவிட்டாள்.

காசிராஜனால் அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. விடுவிடென்று இறங்கி வெளியே நடந்தான்.

வழியெல்லாம் ஒரே சிந்தனை. அலுவலகத்தில் அவலுக்கு அன்று வேலையே ஓடவில்லை. அம்மா கூறிய