பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

49


வம்சாபிவிருத்தி உபதேசம், குடும்பப் பெருக்கின் அவசியம், அவன் உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் பாவம்! அம்மாவையும் ஒரேயடியாகக் குறைகூற அவன் மனம் ஒப்பவில்லை

சாந்தாவை எவ்வளவோ ஆசையோடு அவளே முயன்றுதானே அவனுக்கு மணம் முடித்து வைத்தாள்? ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் கவலையே இல்லாமல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஓடி விட்டாலும், அதன்பிறகு சட்டென்று அம்மா விழித்துக்கொள்ளத் தவறவில்லை.

மருமகளின் வளைகாப்பையும் பூச்சூட்டலையும் அம்மா எவ்வளவுக்கு எவ்வளவு ஆவலாகவும் அவசரமாகவும் எதிர்பார்த்தாளோ, அத்தனைக்கு அத்தனை அது கானல்நீரைப் போலக் கண்ணாமூச்சி காட்டி அவளை ஏமாற்றிக் கொண்டே சென்றது.

இதற்காக, அம்மாவின் சொற்படி, சாந்தா தன் னோடு சேர்ந்து சுற்றாத கோயில் உண்டா? முழுகாத புண்ணிய தீர்த்தங்கள், வேண்டாத தெய்வங்கள் உண்டா? அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்த பிறகுதானே அம்மா வின் அடக்க முடியாத ஆசை இப்படி ஆத்திரமாக உருப் பெற்று விட்டது? ஒருவேளை இந்த முடிவு அம்மாவுக்கு நியாயமானதாகத் தோன்றலாம்; ஆனால் அவளைப் பொறுத்தவரையில் - ?

ஐந்தரை மணிக்கு மேலிருக்கும், எண்ணெய் இல்லாத விளக்கு மாதிரி, பகற்பொழுது விடுவிடுவென்று தேய்ந்து கொண்டே வந்து எங்கும் இருள் பரவத் தொடங்கி

விட்டது சுற்று முற்றும் சூழ்ந்திருந்த கூட்டமோ

அரவமோ சிறிதும் இல்லை. கொய்யாப் பழம்போல், கரையில் முனிசிபல்

விளக்குகள் கம்பத்தில் மினுக்கிக் ம-4