பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மலருக்கு மது ஊட்டிய வண்டு

52 மலருக்கு மது ஊட்டிய வண்டு

'உன்னை ரொம்பப் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்காகவா நீ இப்படி வருந்துவது? எப்படி இருந்தாலும் எனக்கு நீதான், உனக்கு நான்தான். உன்னிட்ம் எனக்குள்ள அன்பை யாராலும் எந்தக் காரணங்களினாலும் குறைத்துவிடவோ மாற்றிவிடவோ முடியாது. என்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா சாந்தா? அவன் மிகவும் உருக்கமாகக் கூறினான்.

ஆனால் அவள் மனம் அவன் கூறிய சமாதானங் களையும் மீறித் துயருறுவதைக் காணக் காசிராஜனுக்குத் தாளவில்லை. பெற்ற தாயிடம் கூடக் கூறத் துணி வில்லாத அதை-கொண்ட மனைவியிடமே கூறவேண்டிய நிலை எவ்வளவு துர்பாக்கியமானது?--

சாந்தா, நான் இப்போது கூறப்போகும் செய்தியைக் கேட்டால், உனக்கு மட்டும் ஏதோ கொடுமை நிகழ்ந்து விட்டதாக எண்ணி இப்படி நீ வருந்தமாட்டாய். நீ ஊருக்குப் போனதும் நானும் இங்கே என் உடம்பைக் காட்டினேன். என்னைப் பரிசோதித்த டாக்டர் உன்னைப் போலவே எனக்கும் குழந்தை பெறும் சக்தி இல்லை என்று கூறி எழுதிக் கொடுத்துவிட்டார். அப்போது அதைக் கேட்டதும் நான் துடித்த துடிப்பு!

ஆனால் அந்தத் துடிப்பையும் மீறி, என் உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் வக்கிரமான மகிழ்ச்சி ஊற்றெடுத் தது . ஒருவேளை ஊரிலிருந்து வருகிற நீயும் என்னைப் ப்ோலவே விபரீத முடிவுடன் வந்துவிட்டால், அப்போது அதற்காக உன்னை அம்மா, கொடுமைப்படுத்தாமல் தடுக்கவாவது தெய்வம் எனக்கு உதவியதே. நாம் இருவரும் ஒரு இளைப் பறவைகள் என்ற உண்மையைக் கூறிவிட்டால். பிறகு என்னை விட்டு உன்னை மட்டும் அம்மாவால் கோபிக்கவோ வெறுக்கவோ முடியாது அல்லவா?’ என்ற மகிழ்ச்சிதான் அது. வா, சாந்தா, மேஜையில் வைத்திருக்கும் என் ரிசல்ட்டைக் காட்டு