பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

53

கே. பி. நீலமணி 53

கிறேன்' என்று காசிராஜன் அவளது கரத்தைப் பற்றி இழுத்தபோது

"மேஜையில் இருக்கும் உ ங் க ள து மெடிகல் ரிபோர்ட்டை நான் ஊரிலிருந்து வந்ததும் எதேச்சையாக பார்த்துவிட்டேன் தக்க சமயத்தில் அதை எனக்குக்

காட்டிய கடவுளுக்கு நான் எவ்வளவு நன்றி செலுத்தி னாலும் தகும். அதைப் பார்த்து உங்கள் விஷயத்தைத் தெரிந்து கொண்டதனால்தானே, நான் என்னைப் பற்றின உண்மையை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டேன்?' என்று சாந்தா கூறிக்கொண்டு வந்த போதே, என்ன; உன்னைப் பற்றின உண்மையா?” என்று காசிராஜன் திடுக்கிட்டுப்போய் அலறினான்.

அவனுடைய அந்த அதிர்ச்சி தணியுமுன் சாந்தா பெட்டியிலிருந்த தன் மெடிகல் ரிபோர்ட்டைக் கொண்டு வந்து கணவனிடம் நீட்டினாள்.

சாந்தாவின் உடலில் எவ்விதக் கோளாறும் இல்லை' என்று பிரபல லேடி டாக்டர் ஒருவர் எழுதிக் கையெழுத்திட்டு, அந்த டாக்டர் பணிபுரியும் அரசாங்க ஆஸ்பத்திரியின் முத்திரையும் அதில் குத்தியிருந்தது.

காசிராஜனுக்குக் கண்ணையே மறைப்பது போலிருந் தது வாய் பேசும் சக்தியை இழந்துவிட்டது. பலதரப் பட்ட எண்ணங்களினாலும், உணர்ச்சிகளின் தாக்குதல் களினாலும் குழம்பிப் போயிருந்த கணவன் முன் சாந்தா தன் வலக்கரத்தை நீட்டியபடி மிகவும் நிதானமாகக் கூறினாள்.

'என்னுடைய இந்த ரிஸ்ல்டைப் பற்றி எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அது அவைக்கு உதவாத மகிழ்ச்சி. அதனால் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால் உங்களைப் பற்றின. இந்த உண்மையை நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அம்மாவிடம் சொல்லமாட்டேன் என்று